உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 42 பேர் தற்செயல் விடுப்பு அலுவலக பணிகள் பாதிப்பு

42 பேர் தற்செயல் விடுப்பு அலுவலக பணிகள் பாதிப்பு

அன்னுார்;அன்னுாரில், 42 பேர் தற்செயல் விடுப்பு எடுத்ததால், ஒன்றிய அலுவலகத்தில் பணிகள் நடைபெறவில்லை. ஊராட்சிகளை, பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் அறிவிப்பையும், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைக்கும் அறிவிப்பையும் அரசு கைவிட வேண்டும். ஊராட்சி செயலர் உள்ளிட்ட பல ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் இரண்டு நாள் போராட்டம் அறிவித்தது. 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்களும் தற்செயல் விடுப்பு எடுத்து பணி புறக்கணிப்பு செய்யப் போவதாக அறிவித்தது.அன்னுார் ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருவர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஐந்து பேர் மற்றும் உதவியாளர்கள் என 22 பேர் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து பணியை புறக்கணித்தனர்.இத்துடன் 20 ஊராட்சிகளில் ஊராட்சி செயலர்களும் தற்செயல் விடுப்பு எடுத்து பணிகளை புறக்கணித்தனர். இதனால் அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகமும், அன்னுார் ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சி அலுவலகங்களும் பணிகள் நடைபெறாமல் நேற்று ஸ்தம்பித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை