| ADDED : ஜூன் 29, 2024 02:03 AM
ஊட்டி:ஊட்டியில் என்.சி.எம்.எஸ்., நிறுவனர் ராவ்பகதுார் ஆரிகவுடரின், 53வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.ஆரிகவுடர் நினைவு விழா குழு நிர்வாகி, படுக தேச பார்ட்டி நிறுவனர் மஞ்சை மோகன் தலைமை வகித்தார். ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் என்.சி.எம்.எஸ்., முன்னாள் தலைவர் கண்ணபிரான் ஆகியோர், முன்னிலை வகித்தனர்.மாவட்ட கலெக்டர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, என்.சி.எம்.எஸ்.,வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ஆரிகவுடர் சிலைக்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, ஆரி கவுடரின் பேரன் ஜெயப்பிரகாஷ் மற்றும் தாரா ஜெயப்பிரகாஷ் ஆகியோரை கவுரவித்தார். இதில், முன்னாள் நாக்குபெட்டா தலைவர் அய்யாரு, விவசாய சங்க செயலாளர் ரங்கசாமி, கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் தயாளன், என்.சி.எம்.எஸ்., மேலாண்மை இயக்குனர் முத்துக்குமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.