உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 10ம் வகுப்பு தேர்வில் 90.61 சதவீதம் பேர் தேர்ச்சி மாநிலத்தில் 26வது இடம்

10ம் வகுப்பு தேர்வில் 90.61 சதவீதம் பேர் தேர்ச்சி மாநிலத்தில் 26வது இடம்

ஊட்டி:நீலகிரியில், 10ம் வகுப்பு தேர்வில், 90.61 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.நீலகிரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம், 26ம் தேதி தொடங்கி ஏப்.,8ம் தேதி வரை நடந்தது. நேற்று, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், மாவட்டத்தில் இந்த பொது தேர்வினை, '3,378 மாணவர்கள், 3,501 மாணவியர்' என, 6,879 பேர் தேர்வு எழுதினர். அதில், '2,931 மாணவர்கள், 3,302 மாணவியர்கள்,' என, மொத்தம், 6,233 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 86.77 சதவீதம்; மாணவிகள் 94.32 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக, 90.61 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 1.79 சதவீதம் அதிகம். இதன்மூலம், நீலகிரி மாவட்டம், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில், 26 வது இடத்தை பிடித்துள்ளது.

அரசு பள்ளிகளில் 85.68 சதவீதம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள, 94 அரசு பள்ளிகளில், 2,639 பேர் தேர்வு எழுதினர். அதில், 2,261 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளி மாணவர்கள், 85.68 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்து உள்ளனர். தற்போது, 'ரேங்க்' முறை இல்லை என்பதால் தேர்வு முடிவுகள் வெளியிட்டவுடன் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளின் பதிவு செய்யப்பட்ட 'மொபைல்' போன் எண்ணிற்கு மதிப்பெண்கள் அனுப்பப்பட்டு விட்டதால் உடனுக்குடன் முடிவுகளை அறிந்து கொண்டனர். பெற்றோர் கூறுகையில், '10ம் வகுப்பு பொதுத் தேர்வில், நீலகிரி மாவட்டம் மாநில அளவில், 26 வது இடம் பிடித்துள்ளது. நடந்து முடிந்த பிளஸ்-டூ தேர்வில் மாநில அளவில், 25 வது இடம் பிடித்துள்ளது. இம்மாவட்டத்தில், 70 சதவீதம் பேர் அரசு பள்ளியை நம்பி படித்து வருகின்றனர். எனவே, முதல், 10 இடங்களுக்குள் வர, நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி