உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

ஊட்டியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

ஊட்டி : கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில், 30ம் தேதி ஊட்டி தேவாங்கர் கல்யாண மண்டபத்தில் மாபெரும் இலவச மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம் காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணிவரை நடக்கிறது. அதில், மகளிர் மருத்துவம், எலும்பியல், வயிறு, குடல், நரம்பியல், சிறுநீரகவியல்,பல், இருதயம், நுரையீரல் போன்ற துறைகளுக்கான மருத்துவ நிபுணர்களால் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட உள்ளது. அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு, 25 சதவீதம் வரை கட்டண சலுகை வழங்கப்பட உள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் துறைசார் மருத்துவ நிபுணர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்று சிகிச்சை அளிக்கின்றனர். பொதுமக்கள் இலவச மருத்துவ முகாமில் பங்கேற்று பயனடையலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை