மேலும் செய்திகள்
ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் மகோற்சவ விழா துவக்கம்
7 hour(s) ago
மீண்டும் மாட்டை கொன்ற புலி அச்சத்தில் உள்ளூர் மக்கள்
7 hour(s) ago
ஊராட்சி பெயரை மாற்ற கலெக்டரிடம் மனு
7 hour(s) ago
ஊட்டி;நீலகிரிமாவட்டத்தின் பல பகுதிகளில், தீயணைப்பு துறையினர், 24 மணி நேரம் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.'சில நாட்கள், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும்,' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம், 456 நிவாரண முகாம்களை தயார்படுத்தியுள்ளது. அனைத்து துறை ஒருங்கிணைப்புடன் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.இந்நிலையில், ஊட்டி உட்பட மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை, சில இடங்களில் கன மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக, கிளன்மார்கன், 32 மி.மீ; நடுவட்டம், 26, மி.மீ;ஊட்டி, 21 மி.மீ ., மழையளவு பதிவாகி உள்ளது.தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் புலுகாண்டி கூறுகையில், ''ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் பகுதிகளில் அந்தந்த தீயணைப்பு துறை மூலம் பேரிடர் தடுப்பு நடவடிக்கையில் தேவையான உபகரணங்களுடன் ஊழியர்கள், 24 மணி நேரம் கண்காணிப்பில் தயார் நிலையில் உள்ளனர். தவிர, பர்லியார், நாடுகாணி, குஞ்சப்பனையில் தீயணைப்பு துறை மொபைல் வாகனம் தயார் நிலையில் உள்ளது,'' என்றார்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago