மேலும் செய்திகள்
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
12 hour(s) ago
குன்னுார்:'குன்னுார் நகராட்சி சாலையில் பள்ளம் ஏற்பட்டு விபத்து அபாயம் உள்ளதால் சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் இருந்து ஓட்டுப்பட்டறை, மவுன்ட் பிளசன்ட், டென்ட் ஹில் உபதலை, பழைய அருவங்காடு உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் இவ்வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.இவ்வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தாலுகா அலுவலகம், கோர்ட, போலீஸ் ஸ்டேஷன்களுக்கு சென்று வருகின்றனர். இந்த சாலையின் நுழைவு பகுதியில் பல பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, அதிவேகத்தில் வரும் மினி பஸ்கள் மற்றும் ஆட்டோக்களை குழியில் சிக்காமல் இயக்கும் போது அவ்வழியாக நடந்து வருவோர் மீது மோதி விபத்துக்கள் நடக்கும் அபாயம் உள்ளது.குன்னுார் நல சங்க செயலாளர் லியாகத் அலி கூறுகையில், ''மவுன்ட் பிளசன்ட செல்லும் சாலை மிக மோசமான நிலையில் இருப்பதால் வாகனங்கள் விபத்துக்கு உட்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக காந்தி சாலை அருகே தனியார் ஓட்டல் முன் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. மினி பஸ்கள் இப்பகுதியில் அதிவேகத்தில் வரும் போது குழியில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. நகராட்சி கமிஷனருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக சீரமைக்க வேண்டும்,'' என்றார்.
12 hour(s) ago