மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி;ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சுற்று பஸ்சை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.ஊட்டியில் கடந்த, 10 ம் தேதி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி மற்றும் ஊட்டி அரசு கலை கல்லுாரி மைதானத்தில் மூன்று நாட்கள் நாய் கண்காட்சி நடந்தது. இதில், மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி இம்மாதம், 20ம் தேதி நிறைவடைகிறது. சுற்றுலா பயணிகள் வருகையால் ஊட்டி களை கட்டியுள்ளது.ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பஸ் ஸ்டாண்டிலிருந்து படகு இல்லம், பிங்கர் போஸ்ட், அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஆவின் வளாகம், தொட்டபெட்டா காட்சி முனை வரை, 100 ரூபாய் கட்டணத்தில், 20 சுற்று பஸ்கள் இயக்கி வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள், 100 ரூபாய் கட்டணத்தில் சுற்று பஸ்சை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.சுற்று பஸ்சை சுற்றுலா பயணிகளின் வசதிக்கேற்ப முறையாக அந்தந்த பகுதிகளுக்கு இயக்க போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பணியாளர்கள் பணியமர்த்தி, முறையாக இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சுற்றுலா பயணிகள் கூறுகையில், ' ஊட்டியில் சுற்று பஸ், 100 ரூபாய் கட்டணத்தில் இயக்கப்படுவது, இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பயன் தருகிறது,' என்றனர்.
03-Oct-2025