மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
16 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
16 hour(s) ago
கூடலுார்;'கூடலுாரில் யானை வழித்தடம் திட்ட மூலம், மக்களை வெளியேற்ற முயற்சி நடக்கிறது,' எனக்கூறி, ஓவேலி செல்வபுரம் பகுதியை சேர்ந்த மணிவர்மா,40, என்பவர் நேற்று காலை, 10:30 மணிக்கு பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு வந்த கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார், வனச்சரகர்கள் ராதாகிருஷ்ணன், சுரேஷ்குமார் எம்.எல்.ஏ., பொன்ஜெயசீலன் ஆகியோர், 'அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,' என கூறி போராட்டத்தை கைவிடும்படி அறிவுறுத்தினார். அதனை ஏற்று, போராட்டத்தை கை விட்ட மணிவர்மா, காலை,11:30 மணிக்கு டவரில் இருந்து கீழே இறங்கினார். தொடர்ந்து, போலீசார் அவரை அழைத்து சென்றனர்.
16 hour(s) ago
16 hour(s) ago