உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

குன்னுார் : குன்னுார் சோல்ராக் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்தது. தொடர்ந்து சில நாட்களாக மழையின் தாக்கம் இல்லாத நிலையில் நேற்று காற்றின் வேகம் அதிகமாக இருந்தது.இந்நிலையில், குன்னுார் சேலாஸ் அருகே சோல்ராக் சாலையில் நேற்று காலை, 8:00 மணியளவில் மரத்தின் பெரிய கிளை உடைந்து சாலையில் விழுந்தது.தகவலின் பேரில், குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்பு துறையினர் அங்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினர். இதனால், அரசு பஸ்கள் உட்பட வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகள் பணிக்கு செல்வோர் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ