உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பதற்றமான ஓட்டு சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு

பதற்றமான ஓட்டு சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு

சூலுார்;சூலுார் சட்டசபை தொகுதியில், ஏழு இடங்களில் உள்ள ஓட்டுச்சாவடிகள் பதற்றம் நிறைந்ததாக கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.சூலுார் சட்டசபை தொகுதியில்,332 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அதில், ஏழு இடங்களில் அமைய உள்ள, 25 ஓட்டு சாவடிகள் பதற்றம் நிறைந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது. சூலுார் மற்றும் கண்ணம்பாளையத்தில் உள்ள அந்த, 25 ஓட்டு சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், அந்த ஓட்டு சாவடிகளுக்கான வாக்காளர் பட்டியல் பெறப்பட்டு, ஆய்வு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மாதையன் கூறுகையில், 'பதற்றம் நிறைந்த வாக்கு சாவடிகளுக்கு தேர்தலன்று கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். மேலும், சூலுார் தொகுதிக்குட்பட்ட சூலுார் மற்றும் சுல்தான்பேட்டை பகுதியில், இதுவரை, 23 துப்பாக்கிகள் பெறப்பட்டு, ஆயுதப்படை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை