உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உணவை தேடி வரும் கரடிகள் குப்பை கொட்டுவதை தடுக்க அறிவுரை

உணவை தேடி வரும் கரடிகள் குப்பை கொட்டுவதை தடுக்க அறிவுரை

குன்னுார்:'குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்,' என, வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து உணவை தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்கின்றன.குறிப்பாக, உலிக்கல், கிளண்டேல், நேருநகர், பில்லிமலை, பழைய அருவங்காடு, உபதலை, கரிமரா ஹட்டி உட்பட பல இடங்களிலும் இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் அவ்வப்போது உலா வருகிறது. குறிப்பாக, உணவு கழிவுகள் ஆங்காங்கே கொட்டுவதால் இவற்றை தேடி கரடிகள் வருவது அதிகரித்துள்ளது. 'ஆங்காங்கே கொட்டப்படும் குப்பைகளை தடுக்க வேண்டும்,' என, உலிக்கல், உபதலை உட்பட பஞ்சாயத்து நிர்வாகங் களுக்கு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ