உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேர்தல் குறித்த வதந்தி புகார் செய்ய அறிவுரை

தேர்தல் குறித்த வதந்தி புகார் செய்ய அறிவுரை

ஊட்டி: தேர்தல் குறித்த தேவையற்ற தகவல் பரப்பினால், காவல் துறையிடம் தெரிவிக்க 'மொபைல்' எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் வரும், 19ல், ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு படை மற்றும் செலவின அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, தேர்தல் விதிமுறைகள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் தேர்தல் குறித்த தேவையற்ற தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இதனை தடுக்க, மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சமூக வலைத்தளங்களில் தேர்தல் குறித்து தேவையற்ற தகவல்கள் அல்லது வதந்திகள் பரப்பினால், அது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் பிரிவுக்கு, 75988 03030 என்ற பிரத்யேக எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்