| ADDED : ஜூலை 01, 2024 02:13 AM
குன்னுார்;குன்னுார் புனித மேரிஸ் மேல்நிலை பள்ளியில் மாணவியர் தலைவி, துணைத் தலைவி தேர்வு மற்றும் மாணவியர் பார்லிமென்ட் துவக்கப்பட்டு பதவியேற்பு விழா நடந்தது.பள்ளி தாளாளர் அருட்சகோதரி ஜெய்மேரி, தலைமை ஆசிரியை அருட்சகோதரி மார்க்ரேட் ஆரோக்கிய மேரி முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் மேஜர் முத்துகுமார், மாணவி யருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து பேசியதாவது: பள்ளிகளில் இது போன்ற பதவிகள் ஏற்படுத்தி செயல்படுத்துவது சிரமமாக இருந்தாலும், பள்ளி ஆசிரியர்களும் நிர்வாகத்தினரும் அதற்காக உறுதுணையுடன் இருந்து செயல்படுத்தியது வரவேற்கத்தக்கது. கிராம பள்ளியில் படித்த போது இது போன்ற பார்லிமென்ட் துவக்கப்பட்டது. அதன் முக்கியத்துவம் தற்போது தெரிகிறது. பள்ளியில் பார்லிமென்ட் துவக்குவதால் அந்தந்த பகுதிகளின் குறைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். ராணுவத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதால் அதிகளவில் மாணவியர் சேர முன்வர வேண்டும். குறிப்பாக ஒரு குடும்பத்தில் ஒரு மாணவியராவது ராணுவத்தில் சேர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக வரவேற்பு நடனம், அணிவகுப்பு மரியாதை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன பள்ளியில் நான்கு அணிகள் தலைவிகள் தேர்வு நடந்தது.