உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு

ஊட்டி;முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றுவோரின் பணியை அங்கீகரிக்கும் விதமாக, சுதந்திர தினத்தன்று முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது வழங்கப்படுகிறது.விருதுக்கு, 15 முதல், 35 வயது வரை உள்ள, மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் தகுதி பெறும் நிலையில், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது.அதன்படி, நடப்பாண்டு ஆக.,15ம் தேதி விருது வழங்கப்படுகிறது. ஏப்.,1ம் தேதியன்று, 15 வயது நிரம்பியவராகவும், மார்ச், 31ம் தேதியன்று, 35 வயதுக்குள்ளாகவும் இருக்க வேண்டும்.கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டும் கருத்தில் கொள்ளப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம், 5 ஆண்டுகள் மாநிலத்தில் குடியிருந்தவராக இருப்பது அவசியம்.சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றி இருப்பதுடன், செய்த தொண்டு கண்டறியப்பட்டிருக்கக் கூடியதாகவும், அளவிட கூடியதாகவும் இருப்பது முக்கியம்.மத்திய மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலை, கல்லுாரியில் பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு, விருதுக்கான பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்படும்.மே., 1ம் தேதி முதல், 3ம் தேதி மாலை, 4:00 மணிவரை, இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள்,தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய www.sdat.tn.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ