மேலும் செய்திகள்
பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
10-Oct-2025
வீட்டை இடித்த யானைகள்; வனத்துறையினர் ஆய்வு
10-Oct-2025
அணைகள் நீர்மட்டம்
10-Oct-2025
மேட்டுப்பாளையம் : காரமடை நகராட்சிக்கு குப்பைகளை சேகரிக்க, 10 பேட்டரி வண்டிகள் மற்றும் 2 கழிவு நீர் உறிஞ்சும் வாகனங்கள் வந்துள்ளன.கோவை மாவட்டம், காரமடை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். காரமடை நகராட்சிக்கு தூய்மை இந்தியா திட்டம் மற்றும் 15 வது நிதிக்குழு சார்பில், ரூ.32 லட்சம் மற்றும் ரூ. 43 லட்சம் மதிப்பில் 2, கழிவு நீர் உறிஞ்சும் வாகனங்கள் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்பில், குப்பைகளை சேகரிக்க 10 பேட்டரி வண்டிகள் வந்துள்ளன. காரமடை நகராட்சி கமிஷனர் மனோகரன் கூறுகையில், ''குப்பைகளை வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்க, 10 பேட்டரி வண்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. ஒரு கழிவு நீர் உறிஞ்சும் வாகனம் வாயிலாக ஒரே நேரத்தில், 6,000 லிட்டர் கழிவு நீரை உறிஞ்ச முடியும். தற்போது கிடைத்துள்ள 2 கழிவு நீர் உறிஞ்சும் வாகனங்கள் வாயிலாக ஒரு வாகனம் நகராட்சிக்குட்பட்ட கழிப்பிடங்களில் உள்ள செப்டிக் டேங்க் கழிவு நீர் உறிஞ்சப்படும். மற்றொரு வாகனம் வாயிலாக சாக்கடைகளில் உள்ள கழிவு நீர் உறிஞ்சப்படும். நகராட்சி மக்கள் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும்,'' என்றார்.
10-Oct-2025
10-Oct-2025
10-Oct-2025