மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
10 hour(s) ago
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
10 hour(s) ago
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
10 hour(s) ago
கூடலுார்;கூடலுார் தொரப்பள்ளி பகுதியில், இரவில் காட்டு யானைகள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வரும், 'கும்கி' யானை சீனிவாசன், பகல் நேரம் படுத்து உறங்கும் காட்சி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.கூடலுார் தொரப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் முகாமிட்டுள்ள, காட்டு யானைகள், இரவில் குடியிருப்புக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களையும் அச்சுறுத்தி வருகிறது.அவைகளை விரட்டும் பணியில், முதுமலை கும்கி யானைகள் சீனிவாசன், 'சேரம்பாடி' சங்கர் ஆகியவை பகல் மட்டுமின்றி, இரவிலும் வனத்துறைக்கு உதவி வருகின்றன. பணி முடிந்து உடல் அசதி ஏற்படும்போது, 'கும்கி' யானை சீனிவாசன் படுத்து உறங்கி ஓய்வெடுத்து வருகிறது. இந்த காட்சியை அப்பகுதி மக்கள் வியப்புடன் ரசித்து வருகின்றனர்.பாகன்கள் கூறுகையில், 'கும்கி' யானை சீனிவாசன் இரவில் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடும். பகல் ஓய்வு கிடைப்பதால் நன்றாக உறங்கும். அதனை யாரும் இடையூறு செய்யக்கூடாது. மேலும் மழையின் போது சேற்றில் படுத்து உருண்டு விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது,' என்றனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago