உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு பஸ் நடத்துனர் மீது தாக்குதல்; கேரளா போலீசார் விசாரணை

அரசு பஸ் நடத்துனர் மீது தாக்குதல்; கேரளா போலீசார் விசாரணை

கூடலுார் : கேரளா மாநிலம், மலப்புரம் வழிகடவு பகுதியில்,கூடலுார் அரசு பஸ் நடத்துனரை தாக்கியது தொடர்பாக, நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம் நிலம்பூர்பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று முன்தினம் காலை, கூடலுார் புறப்பட்ட தமிழகஅரசு பஸ், எடகரா பகுதியை கடந்து வந்தது. அப்போது, வழிகடவு அருகே, கூடலுாரை சேர்ந்த பஸ் நடத்துனர் மணிகண்டனுக்கும், அதில் பயணம் செய்த பயணி ஒருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.பஸ் வழிக்கடவு பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டது. பஸ்சிலிருந்து இறங்கிய அந்த பயணி, மேலும், சிலரை அழைத்து வந்து பஸ் நடத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளனர். நடத்துனர் வழிகடவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் நான்கு பேர் மீது வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்