உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நாயை வேட்டையாட முயற்சி ஏமாற்றத்துடன் திரும்பிய சிறுத்தை

நாயை வேட்டையாட முயற்சி ஏமாற்றத்துடன் திரும்பிய சிறுத்தை

கோத்தகிரி:கோத்தகிரி அருகே நாயை கவ்வி இழுத்து செல்ல முயன்ற சிறுத்தை, ஏமாற்றத்துடன் திரும்பியது.கோத்தகிரி- மேட்டுப்பாளையம் இடையே, மேல்தட்டப்பள்ளம் பகுதியில், தனியார் தேயிலை தொழிற்சாலை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.தொழிற்சாலை அலுவலர் மற்றும் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வளர்ப்பு நாய்கள் வளர்க்கப்படுகின்றன. நேற்று காலை அந்த வழியாக சென்ற சிறுத்தை, கூண்டுக்குள் அடைக்கப்பட்டு இருந்த நாய்களை வேட்டையாட முயன்றுள்ளது. கூண்டை உடைக்க நீண்ட நேரம் போராடியும் சிறுத்தையால் முடியவில்லை.நாய்கள் குரைத்ததை அடுத்து, குடியிருப்பில் இருந்து வெளியே வந்தவர்கள், கல் எறிந்து சிறுத்தையை விரட்டியதுடன், 'மொபைல்' போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.நாயை கவ்வி இழுத்து செல்ல முயன்ற சிறுத்தை, ஏமாற்றத்துடன் திரும்பிய பதிவு, சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி