உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாதித்த மாணவர்களுக்கு பரிசு

சாதித்த மாணவர்களுக்கு பரிசு

கோத்தகிரி:கோத்தகிரி தாலுகா ஈழுவா, தீயா நலசங்கத்தின் கூட்டம் நடந்தது. சங்க ெசயலாளர் சீனிவாசன் வரவேற்றார். தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். மாநில பேரமைப்பின் கவுரவ தலைவர் கோரல் விஸ்வநாதன், துணை தலைவர் ஜாக்சன் முன்னிலை வகித்தனர். கோத்தகிரி சங்கத்தின் பெண்கள் பிரிவு துவக்கி வைக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள், தேசிய அளவில் குத்துச் சண்டை போட்டியில் சாதித்த மாணவன், பரதநாட்டியத்தில் கலைமணி விருது பெற்ற மாணவி உள்ளிட்டோருக்கு பரிசு கேடயங்கள் வழங்கப்பட்டது. நிர்வாகி தினேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை