உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை, காட்டெருமை; வனவிலங்குகளால் அடுத்தடுத்த சுவாரஸ்யம்

வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை, காட்டெருமை; வனவிலங்குகளால் அடுத்தடுத்த சுவாரஸ்யம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஊட்டி:நீலகிரி மாவட்டம், குன்னுார் சிம்ஸ் பூங்காவில், 150வது பழக்கண்காட்சியை சிறப்பிக்கும் வகையில் கோவை, தஞ்சாவூர், தேனி, கரூர், பெரம்பலுார், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில் பல லட்சம் பழங்களால் தலையாட்டி பொம்மை, அன்னப்பறவைகள், இந்தியா கேட், ஒட்டகம் என, பல்வேறு வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில் ஒரு கரடி பூங்காவில் நுழைந்து பழங்களை ருசிக்க முயற்சித்தது. பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். பூங்காவுக்கு வந்த வனத்துறையினர் கரடியை விரட்டி, பூங்கா கேட்டை மூடினர். பின், பூங்கா ஊழியர்களுடன் காட்சிப்படுத்தப்பட்ட பழங்களுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு கொடுத்தனர்.அதே போல, மஞ்சூர் அருகே மட்டக்கண்டி கிராமத்தை சேர்ந்த நஞ்சுண்டராஜ், ஊட்டி எச்.பி.எப்., தொழிற்சாலையில் பொது மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று மதியம் தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டெருமை வழித்தவறி காம்பவுன்ட் சுவரை தாண்டி அவரது வீட்டில் நுழைந்தது. வெளியேற வழித்தெரியாமல் வீட்டு வளாகத்தில் சுற்றித்திரிந்தது. கிராம மக்களை தொடர்பு கொண்ட நஞ்சுண்டராஜ், பொதுமக்கள் உதவியுடன் வீட்டின் கேட்டை திறந்து வைத்தார். சிறிது நேரத்தில் கேட் வழியாக வந்த காட்டெருமை தேயிலை தோட்டம் வழியாக வனத்திற்குள் சென்றது.----மற்றொரு சம்பவத்தில், கூடலூர், ஸ்ரீமதுரை சேமுண்டி அருகே, இடும்பன் என்பவர், தேயிலை செடிகளை, 'புரூனிங்' செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று பகல், 12:00 மணியளவில் செபாஸ்டின் என்பவர் வீட்டில் சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்தபோது, வீட்டிற்குள் சிறுத்தை இருப்பது தெரியவந்தது. திடீரென அவரை நோக்கி வந்தது. சுதாரித்து வீட்டின் கதவை பூட்டி வெளியேறினார். சிறுத்தை நுழைந்த வீட்டை காண மக்கள் குவிந்தனர். சிறுத்தை ஆக்ரோஷமாக இருப்பதை அறிந்த வனத்துறையினர், தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி அதை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

M Ramachandran
மே 26, 2024 12:30

லஞ்ச் கிடைக்கும் என்று வீட்டிற்கு வந்திருக்குயே அதாவது ஆடு அல்லது கோழி உணவாக கிடைக்கும் என்று நம்பி வந்திருக்கு


pmsamy
மே 26, 2024 08:19

மிருகங்கள் வாழ்கின்ற காட்டில் ஏன் பூங்கா அமைக்கப்பட்டது????


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ