உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அருவங்காடு சாலையில் கரடி: அச்சத்தில் மக்கள்

அருவங்காடு சாலையில் கரடி: அச்சத்தில் மக்கள்

குன்னுார்;குன்னுார் பழைய அருவங்காடு சாலையில் உலா வரும் கரடியால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பழைய அருவங்காடு சாலையில் பகல் நேரத்திலேயே உலா வரும் கரடியால் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சமடைந்துள்ளனர். மக்கள் கூறுகையில், 'கரடிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வனத்துறையினர், கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ