உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பாழடைந்த குடியிருப்பில் கரடி தஞ்சம்; வனத்துறை நடவடிக்கை அவசியம்

பாழடைந்த குடியிருப்பில் கரடி தஞ்சம்; வனத்துறை நடவடிக்கை அவசியம்

குன்னுார் : குன்னுார் கரும்பாலம் அருகே பாழடைந்த குடியிருப்பில் தஞ்சமடைந்த கரடியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.குன்னுார் கரும்பாலம் அருகே நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் இருந்து பென்காம் செல்லும் குறுக்கு பாதையில் பாழடைந்த குடியிருப்புகள் உள்ளன. இவ்வழியாக பஞ்சாயத்து குடிநீர் குழாயை திறக்க தினமும் குடிநீர் பணியாளர்கள் சென்று வருகின்றனர்.நேற்று முன்தினம் இந்த பாழடைந்த குடியிருப்புக்குள் இருந்து வெளியே வந்த கரடியை சிலர் பார்த்துள்ளனர். சில நேரங்களில் கரடிகள் பாழடைந்த குடியிருப்பில் தஞ்சம் அடைந்து, இரவு நேரங்களில் கரும்பாலம் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.எனவே, வனத்துறையினர் இப்பகுதியில் ஆய்வு செய்து, கூண்டு வைத்து கரடியை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ