உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காலநிலை மாற்றத்தால் பல்லுயிர் சூழல் அழிவு உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியில் கவலை

காலநிலை மாற்றத்தால் பல்லுயிர் சூழல் அழிவு உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியில் கவலை

கோத்தகிரி:கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் 'லாங்வுட்' சோலை அமைந்துள்ளது. நகரின் 'மைக்ரோ கிளைமேட்டை' நிர்ணயிக்கும் இச்சோலை, 50 ஆயிரம் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது. அரியவகை விலங்குகள், பறவைகள் மற்றும் தாவர இனங்களின் புகலிடமாக விளங்கும் இச்சோலைக்கு, உலக அளவிலான அங்கீகாரமாக, பசுமை நிழற்குடை மற்றும் ராம் சார் விருதுகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, சோலையில் களை செடிகள் அகற்றப்பட்டு, புதிய சோலை மர நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமை வகித்தார். கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, ரேஞ்சர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ஆசிரியர் ராஜூ பேசியதாவது:ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளுக்கு இணங்க, உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. பூமியின் சமநிலை மாறும் போது, பேரழிவு ஏற்படுகிறது.புவி வெப்பத்திற்கு முக்கிய காரணமான பசுமைக்குடில் வாயுக்களில், கார்பன் டையாக்சைடு அளவு, உலக மக்கள் தொகையின் எடையை விட, 200 மடங்கு உயர்ந்துள்ளது. காலநிலை மாற்றத்தால், இயற்கை சீற்றம் ஏற்படுவதுடன், பல்லுயிர் அழிவது வேதனை அளிக்கிறது. வரமுறையற்ற 'பிளாஸ்டிக்' பயன்பாட்டால், காற்று மற்றும் நீர் மண்டலம் பாதிக்கிறது. மக்கள் வாழ்வதற்கு பூமியை தவிர வேறு இடமில்லை என்பதை உணர்ந்து, அனைவரும் ஒருங்கிணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை