மேலும் செய்திகள்
நல் நுாலகர் விருது
13-Dec-2025
வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை
13-Dec-2025
அணைகள் நீர்மட்டம்
13-Dec-2025
ஊட்டி : கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளா மாநிலம், கேரளா எல்லையை ஒட்டியுள்ள பிற பகுதிகளிலிருந்து கோழியினங்கள், முட்டைகள், கோழியின் எச்சம், கோழி தீவனங்கள் வாகனங்களில் ஏற்றி வருவது குறித்த கண்காணிக்கப்டுகிறது.கக்கனல்லா, நம்பியார் குன்னு, தாளூர், சோலாடி, கக்குண்டி, பூல குன்னு, நாடுகாணி, பாட்டவயல். ஆகிய எட்டு சோதனை சாவடிகளில் கால்நடை உதவி மருத்துவர் தலைமையில், ஒரு கால்நடை ஆய்வாளர் மற்றும் ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர் கொண்ட குழு சோதனை பணி மேற்கொள்கிறது. போலீசார், வனத்துறை மற்றும் வருவாய்துறையுடன் இணைந்து பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். நோயின் அறிகுறிகள்:
பறவை காய்ச்சல் கோழி, வாத்து, வான்கோழி, மற்றும் வனப்பறவைகள், மனிதரையும் தாக்குகிறது. நோய் தாக்கிய வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் வனப்பறவைகள் மூலம் இந்நோய் நமது மாவட்டத்திலும் நுழைய வாய்ப்புள்ளது. பறவை காய்ச்சல் நோயின் குறிகுறிகள் தலை மற்றும் கொண்டை வீக்கம், கொண்டையில் நீல நிறம் பரவுதல், சோர்வு, அதிக அளவில் இறப்பு, இறந்த கோழிகளின் தசைகளில், ரத்தக்கசிவு, மூச்சுக்குழலில் அதிக சளி, அனைத்து உள் உறுப்புகள், கால்களின் மீது ரத்த கசிவு காணப்படுகிறது. பறவை காய்ச்சல் நோயை தடுக்க மாவட்ட நிர்வாகம், அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கேரளா மாநில பிற பகுதிகளிலிருந்து கோழியினங்கள், முட்டைகள், கோழியின எச்சம் மற்றும் கோழி தீவனங்கள் வாகனங்களில் ஏற்றி வருவது மறு உத்தரவு வரும்வரை தடை செய்யப்பட்டுள்ளது.
13-Dec-2025
13-Dec-2025
13-Dec-2025