மேலும் செய்திகள்
சுகாதார ஆய்வாளர் பணிக்கான தேர்வு
1 hour(s) ago
ஊட்டி பூண்டு விலை சரிவு: கிலோ ரூ.80க்கு விற்பனை
1 hour(s) ago
கூடலுாரில் நோய் தாக்குதலால் பாக்கு மகசூல் பாதிப்பு
2 hour(s) ago
சாலையோர நீர்வீழ்ச்சி; வனத்துறை எச்சரிக்கை
2 hour(s) ago
ஊட்டி : நீலகிரி தொகுதி பா.ஜ., வேட்பாளர் முருகன் நேற்று, நீலகிரி லோக்சபாவுக்கு உட்பட்ட அன்னுார், தென் திருப்பதி நால் ரோடு, காரமடை, மேட்டுப்பாளையம், கோத்தகிரி, குன்னுார் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு, இறுதி பிரசாரத்தை ஊட்டி ஏ.டி.சி.,யில் நிறைவு செய்தார். அப்போது, பிரசாரத்தில் அவர் பேசுகையில், ''ஊட்டியில் சர்வதேச தரத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம் உருவாக்கப்படும். இதன் மூலம் தொழில் துறையில் முன்னேற்றம் அடைவதுடன் அரசு மற்றும் கல்வி ஆகிய வற்றில் பிணைப்பு வலுப்படுத்தப்படும். சுற்று சூழல் பாதிப்பு இல்லாமல் உலக தரத்தில் சுற்றுலா மையம் மற்றும் உட் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். நீலகிரி தேயிலைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும். படுகர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நீலகிரி லோக்சபா தொகுதிக்கான தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அறிவிப்புகள் படிப்படியாக தீர்க்கப்படும்.'' என்றார். மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago