மேலும் செய்திகள்
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
5 hour(s) ago
பந்தலுார்;பந்தலுார் பகுதி வனங்களில் காணப்படும் கருங்குரங்குகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.பந்தலுார் பகுதியில் உள்ள வனங்கள், தமிழக--கேரளா மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இதனால், வனவிலங்குகள் இடம் பெயர்வது அதிகரிக்கிறது. அதில், அழிவின் பட்டியலில் உள்ள கருங்குரங்குகள் தமிழக வனப்பகுதியில் பழங்களை உட்கொள்வதற்காக, கேரளாவில் இருந்து அதிகளவில் வர துவங்கியுள்ளன.கடந்த காலங்களில் நீலகிரி காடுகளில் வேட்டை கும்பல் கருங்குரங்குகளை வேட்டையாடி வந்தனர். இதன் இறைச்சி மருத்துவ குணம் கொண்டதாக கூறப்படுவதால், இவ்வகை குரங்குகள் வேட்டை காரர்களால் குறைந்துள்ளன.தற்போது, பந்தலுார் அருகே நீர்மட்டம், கிளன்ராக் பகுதிகளில் அதிகளவில் இவ்வகை குரங்குகள் காணப்படுகின்றன.வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில்,' அழிவின் விளிம்பில் உள்ள கருங்குரங்குகளை வேட்டை கும்பலிடமிருந்து காப்பாற்ற வேண்டியது அவசியமாகும். இப்பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்,' என்றனர்.
5 hour(s) ago