உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / எல்லை சோதனை சாவடி: பறவை காய்ச்சல் தடுப்பு பணி

எல்லை சோதனை சாவடி: பறவை காய்ச்சல் தடுப்பு பணி

பந்தலுார்;கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் பறவை காய்ச்சல் தீவிரமடைந்து வளர்ப்பு கோழிகள் மற்றும் வாத்துகள் உயிரிழந்து புதைக்கப்பட்டு வருகின்றன.அதில், தமிழக பகுதிக்குள் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில், மாநில எல்லை சோதனை சாவடிகளில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தமிழக- கேரளஎல்லையான, பந்தலுார் அருகே சேரம்பாடி சோலாடி சோதனை சாவடியில், கால்நடை டாக்டர் நவீன் தலைமையிலான குழுவினர், கேரளாவில் இருந்து, தமிழக எல்லைக்குள் வரும் சரக்கு வாகனங்கள் அனைத்தையும் கிரிமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே, அனுமதிக்கின்றனர். மேலும், கிராம பகுதிகளில் கோழிகள் மற்றும் வாத்துக்கள் வளர்ப்போர் மத்தியில் பறவை காய்ச்சல் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்