உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுாரில் ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் பஸ் போக்குவரத்து துவக்கம்

கூடலுாரில் ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் பஸ் போக்குவரத்து துவக்கம்

கூடலுார்;கூடலுார் ஓவேலி சீபுரம் அருகே, சாலையில் விரிசல் ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் முடிந்து போக்குவரத்து துவங்கியது.கூடலுாரில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்தும், மண்ணரிப்பு ஏற்பட்டு அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.இந்நிலையில், ஓவேலி எல்லமலை சாலை, சீபுரம் அருகே, 1ம் சாலையோரம் விரிசல் ஏற்பட்டது. அப்பகுதியை அரசு பஸ் மற்றும் கனரக வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஜீப் போன்ற சிறிய வாகனங்கள் மட்டும் இயக்கப்பட்டன.எல்லமலை, சீபுரம், பெரியசோலை மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.தொடர்ந்து, வாகனங்கள் இயக்க இடையூறாக சாலையோரம் இருந்த பாறை கற்களில், துளையிட்டு ரசாயன கலவை பயன்படுத்தி உடைத்து, சாலையை விரிவுபடுத்தும் பணி மேற்கொண்டனர்.இப்பணிகள் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. தொடர்ந்து, ஒரு வாரத்துக்கு பின் நேற்று, முதல் அவ்வழியாக அரசு பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டது. கிராம மக்கள், வாகன ஓட்டுனர்கள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்