உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கொட்டும் மழையிலும் முட்டைக்கோஸ் நாற்று நடவு

கொட்டும் மழையிலும் முட்டைக்கோஸ் நாற்று நடவு

கோத்தகிரி;கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டும் மழையிலும், விவசாயிகள் முட்டைக்கோஸ் நாற்று நடவு செய்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில், தேயிலைக்கு அடுத்தபடியாக, மலைக்காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தனியார் மற்றும் தோட்டக்கலை துறை மூலம், முட்டைக்கோஸ் விதைகளை வாங்கி பாத்திகளில் விதைத்து, விவசாயிகள் நாற்றுக்களை தயார் செய்து வைத்துள்ளனர்.இந்நிலையில், கோத்தகிரி பகுதியில், நெடுகுளா, ஈளாடா, கூக்கல்தொறை உள்ளிட்ட பகுதிகளில் கணிசமான பரப்பளவில் முட்டைக்கோஸ் பயிரிடும் பணி நடந்து வருகிறது. தற்போது, மாவட்ட முழுவதும் பருவ மழை பெய்து வரும் நிலையில், நாற்றுக்களை நடுவு செய்ய ஏதுவான காலநிலை நிலவுகிறது.ஏற்கனவே நிலத்தை உழுது பண்படுத்தி வைத்துள்ள விவசாயிகள் முட்டை கோஸ் நாற்றுகள் நடவு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். மழை நாட்களில், நாற்றுகள் விரைவில் உயிர் பிடிக்கும் என்பதால், கூடுதலான தொழிலாளர்களுடன் பணியை துரிதப்படத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை