மேலும் செய்திகள்
சுகாதார ஆய்வாளர் பணிக்கான தேர்வு
23 hour(s) ago
ஊட்டி பூண்டு விலை சரிவு: கிலோ ரூ.80க்கு விற்பனை
23 hour(s) ago
சாலையோர நீர்வீழ்ச்சி; வனத்துறை எச்சரிக்கை
27-Oct-2025
ஊட்டி : 'மகப்பேறு திட்டத்தில் நிதி உதவி பெற பதிவு செய்ய முகாம்கள் நடத்தப்படும்,'என, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ், நிதி உதவி பெற தங்கள் கர்ப்பத்தை சுயமாக பதிவு செய்ய வரும், 27 வரை அரசு ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில் முகாம்கள் நடக்கிறது.துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில்,''முகாமில் கர்ப்பிணியின் பெயர், வயது, ஆதார், திருமண தேதி, அஞ்சல் எண்ணுடன் முகவரி, மருத்துவமனையில் கர்ப்பத்தை உறுதி செய்து மருத்துவரின் முத்திரை கையொப்பம் பெற்ற சான்றிதழ், பதிவேற்றம் செய்ய கொடுக்க வேண்டும். இந்த வசதிகள் முகாம்களிலும், மற்ற நேரங்களிலும் https://picme3.tn.gov.inஎன்ற இணையத்தை பயன்படுத்தி சுயமாக கர்ப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்,'' என்றார்.
23 hour(s) ago
23 hour(s) ago
27-Oct-2025