உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கார் கவிழ்ந்து விபத்து

கார் கவிழ்ந்து விபத்து

பந்தலுார்:கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே குன்னமங்கலம் என்ற இடத்தில் இருந்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் நேற்று காலை, ஊட்டிக்கு சுற்றுலா செல்வதற்காக காரில் வந்துள்ளனர். பந்தலுார் அருகே இந்திரா நகர் என்ற இடத்தில் கார் வந்த போது, காரை ஓட்டி வந்த டிரைவர் அஸ்லபி,21, உறங்கியதால், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்தது. அதில், 6 பேர் பயணம் செய்த நிலையில், அன்சிலா,29, மற்றும் ரபீக்,32, ஆகியோருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது.ஒரு குழந்தை உள்ளிட்ட மற்றவர்கள் எந்த காயமும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். காயம் அடைந்தவர்கள் பந்தலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் அனுப்பி வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை