உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பிளஸ்---2 தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு ரொக்க பரிசு

பிளஸ்---2 தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு ரொக்க பரிசு

கூடலுார்;கூடலுார் நகரில் பிளஸ்--2 பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு வணிகர் சங்கம் சார்பில், ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.கூடலுார் நகரில் பிளஸ்--2 பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று சாதித்த, மாணவர்களுக்கு, நகர வணிகர் சங்கம் சார்பில் பரிசு வழங்கும் விழா நேற்று நடந்தது. தலைவர் அப்துல்ரசாக் வரவேற்றார். வணிகர் நல அறக்கட்டளை உறுப்பினர் விவேக் தலைமை வகித்தார்.டி.எஸ்.பி., வசந்தகுமார், தாசில்தார் ராஜேஸ்வரி ஆகியோர் கல்வியின் அவசியம் குறித்து பேசினர். தொடர்ந்து, வணிகர் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளில் சாதனை புரிந்த மாணவி தர்ஷாதினி, கோபிகா,அக்ஷிதா மற்றும் மாணவர் அஸ்வின் கிருஷ்ணன் ஆகியோருக்கு நினைவு பரிசுடன் முறையே, 10 ஆயிரம் ரூபாய், 5000, 3000 ரொக்க பரிசு வழங்கப்பட்டது. பொதுப் பிரிவில், மாணவிகள் சஞ்சனா, காவியா, சந்தியா,கரோல் ஜஸ்டினா ஆகியோருக்கு நினைவு பரிசுகளுடன் முறையே, 10 ஆயிரம் ரூபாய், 5000, 3000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்களும் கவுரவிக்கப்பட்டனர்.சங்க மாவட்ட செயலாளர் குலசேகரன், மாவட்ட கூடுதல் செயலாளர் பாதுஷா, பொருளாளர் லியாகத் அலி, நகர பொருளாளர் சைஜுமோன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயலாளர் சம்பத்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ