மேலும் செய்திகள்
பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
12 hour(s) ago
வீட்டை இடித்த யானைகள்; வனத்துறையினர் ஆய்வு
12 hour(s) ago
அணைகள் நீர்மட்டம்
12 hour(s) ago
தென் மாநில தேயிலை ஏலங்களில் சரிவு
12 hour(s) ago
குன்னூர்;குன்னூரில் வாழ்விட சூழல் மாற்றத்தால் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் இந்த ஆண்டு மழையின் தாக்கம் அதிகரித்து வனங்கள் பசுமைக்கு மாறியுள்ளன. குறிப்பாக குன்னூர் -- மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. மித வெப்ப கால நிலை நிலவும் பர்லியார், மரப்பாலம் உட்பட சுற்றுப்புற பகுதிகளில் அத்தி உள்ளிட்ட மரங்களில் பழங்கள் அதிகளவில் விளைந்துள்ளன. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படும் பறவைகள் இந்த பழங்களை உண்ண வருகின்றன. இதேபோல், குன்னுார் சிம்ஸ்பூங்கா பகுதியிலும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுற்று சூழல் ஆர்வலர் ஆசாத் கூறுகையில், ''தற்போது குன்னூர் பகுதிகளில் குண்டு கரிச்சான் எனப்படும் மேக்பை ராபின், வாலாட்டி குருவியான வேக் டைல்,வண்ணாத்தி குருவி உட்பட பல பறவைகள் அதிகம் காணப்படுகின்றன. நீலகிரி உயிர் சூழல் மண்டலத்தில் வாழ்விட சூழல் மாற்றத்திற்கு ஏற்ப இவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன'' என்றார்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago