மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி : தொட்டபெட்டா சாலையில் சோதனை சாவடி மாற்றி அமைக்கும் பணியை ஒட்டி சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்தை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர்.தற்போது, கோடை சீசன் என்பதால், கடந்த, 10ம் தேதி முதல், 14ம் தேதி வரை, 45 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். தொட்டபெட்டா சந்திப்பில் வனத்துறை சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியால் பிரதான சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்குகிறது. இதை தவிர்க்க சோதனை சாவடியை மாற்றி அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுத்தது. அதற்கான பணிகள் நடப்பதால், இன்று, 16ம் தேதி முதல், 22ம் தேதி வரை தொட்டபெட்டா சிகரம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
03-Oct-2025