உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கல்லுாரி மாணவர்கள் ரத்ததானம்

கல்லுாரி மாணவர்கள் ரத்ததானம்

கூடலுார்;கூடலுார் அரசு கல்லுாரியில், நீலகிரி மாவட்ட மருத்துவ கல்லுாரி மற்றும் கூடலுார் அரசு கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மருத்துவ கல்லுாரி டாக்டர்கள் பிரவீன், பிரான்சின் ஆகியோர், 'ரத்த தானம் வழங்குவதின் அவசியம் மற்றும் நன்மைகள்; ரத்த தானம் வழங்கும் முறைகள்; யாரெல்லாம் ரத்த தானம் வழங்கலாம்' என்பது குறித்து விளக்கினர்.மருத்துவக் கல்லுாரி ஆலோசகர் சுரேஷ்பாபு, 'போதைப் பொருள்கள் தீமைகள்' குறித்து விளக்கினார் மாணவர்களிடமிருந்து, 35 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மணிகண்டன், பொற்கோ, அர்ஜுனன், செல்வகுமார் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ