மேலும் செய்திகள்
பா.ஜ., ஆலோசனை கூட்டம்
07-Jun-2026
கோத்தகிரி: கோத்தகிரி தேனாடு கிராமத்தில், நீலகிரி மாவட்ட வீரசைவ லிங்காயத்து சமுதாய முன்னேற்ற சங்கம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. சங்க தலைவர் அரிமா கோபால் வரவேற்றார். விழாவுக்கு, மைசூரு பூஜ்ய ஸ்ரீ நடராஜ் மகா சுவாமிகள், தாவன் கெரெ கல்யாண் மகா சுவாமிகள் மற்றும் இட்டக்கல் மடம் வித்வான் பூஜ்யஸ்ரீ சிவகுமார் சுவாமிகள், தர்ம கர்ததா ஸ்ரீ ஜெயகுமார் சுவாமிகள் ஆகியோர், சிறப்பு அழைப்பாளாகளாக பங்கேற்று, தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். ஊட்டி தொகுதி எம்.எல்.ஏ., போஜராஜன் வெற்றிபெற்றதற்கு அருளாசி வழங்கி பாராட்டு தெரிவித்தனர். நிகழ்ச்சியில், பொரங்காடு சீமை பார்பத்தி பசுவராஜ், தொழிலதிபர் இட்டக்கல் ராஜேஷ் சந்தர் உட்பட பலர் பங்கேற்றனர். சங்க மக்கள் தொடர்பு அலுவலர் கோபால் நன்றி கூறினார்.
07-Jun-2026