உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோத்தகிரியில் தொடரும் மழை: ஈரம் கண்ட விவசாய நிலங்கள்

கோத்தகிரியில் தொடரும் மழை: ஈரம் கண்ட விவசாய நிலங்கள்

ஊட்டி;கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால், விவசாய நிலங்கள் ஈரம் கண்டு வருகிறது; விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அக்னி வெயிலால் காய்ந்து கிடந்த தேயிலை தோட்டங்கள் மற்றும் காய்கறி விவசாய நிலங்களில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோத்தகிரி, கீழ் கோத்தகிரி மற்றும் கட்டபெட்டு உட்பட, சுற்றுவட்டார பகுதிகளில், மழை பெய்தது. இந்த மழை, விவசாய நிலங்களுக்கு அனுகூலமாக உள்ளது. குறிப்பாக, காய்ந்து கிடந்த தேயிலை செடிகளில், பசுந்தேயிலை அரும்புகள் துளிர்விட்டு மகசூல் அதிகரிக்க ஏதுவாக அமைந்துள்ளது.மேலும், கோத்தகிரி ஈளாடா உட்பட, முக்கிய நீர் ஆதாரங்களில் தண்ணீர் கொள்ளளவு உயர்ந்துள்ளதால், எதிர்வரும் நாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளதால், விவசாயிகள் உட்பட, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை