| ADDED : ஜூலை 16, 2024 11:04 PM
ஊட்டி;மசினகுடியில் கூட்டுறவு சங்கம் சார்பில், உறுப்பினர் கல்வித் திட்டம் நிகழ்ச்சி நடந்தது.மசினகுடி மலைவாழ் மக்கள் பெரும் பல்நோக்கு கூட்டுறவு சங்கம் மற்றும் மாயார் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றின் செயல் எல்லையில், மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சார்பில், உறுப்பினர் கல்வித் திட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தயாளன் தலைமை வகித்தார். நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் துணைப் பதிவாளர் அய்யனார் முன்னிலை வகித்தார். அதில், கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பாக, உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.மேலும், கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் சேவைகள், உறுப்பினர்கள் தங்களது பொருளாதாரத்தை உயர்த்த கடன் பெற்று பயனடைய ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டுறவு உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.இதில், திரளான சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். மசினகுடி மலைவாழ் மக்கள் பெரும் பல்நோக்கு கூட்டுறவு சங்க செயலாளர் முருகன் வரவேற்றார். ஊர் பெரியவர் சிவலிங்கம் நன்றி கூறினார்.