உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையோரம் காய்ந்த ஆபத்தான மரங்கள்; ஆய்வு செய்து அகற்றுவது அவசியம்

சாலையோரம் காய்ந்த ஆபத்தான மரங்கள்; ஆய்வு செய்து அகற்றுவது அவசியம்

கூடலுார்; கூடலுார் பகுதியில் சாலையோரங்களில் விழும் நிலையில் உள்ள, காய்ந்த மரங்களை ஆய்வு செய்து அகற்ற வேண்டும்.கூடலுார் பகுதியில், சாலையோரங்களில் ஆபத்தான மரங்கள், மரக் கிளைகள் அதிகளவில் உள்ளன. இது குறித்து மக்கள் புகார் அளித்தாலும், அவற்றை அகற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், பருவமழை காலங்களில், மரங்கள், மரக்கிளைகள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.இதனை தவிர்க்க, வருவாய் துறையினர், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஒருங்கிணைந்து ஆய்வு செய்து, சாலை ஓரங்களில் விழும் நிலையில் உள்ள மரங்கள், மரகிளைகள் மற்றும் காய்ந்த மரங்களை அடையாளம் கண்டு, பருவமழைக்கு முன் அகற்ற உள்ளூர் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.ஓட்டுனர்கள் கூறுகையில், 'கூடலுாரில் அரசு துறையினர் ஒருங்கிணைந்து முக்கிய சாலை ஓரங்களில் ஆய்வு மேற்கொண்டு, ஆபத்தான நிலையில் மற்றும் காய்ந்த மரங்களை அகற்ற வேண்டும்.மண்சரிவு ஏற்படும் ஆபத்து உள்ள பகுதிகளில், மண்ணரிப்பை தடுக்கக்கூடிய தாவரங்களை நடவு செய்ய வேண்டும். இதன் மூலம் பருவமழை காலத்தில் மரங்கள் சாய்ந்து வாகன போக்குவரத்து பாதிக்கப்படுவதை, முன்னெச்சரிக்கையாக தவிர்க்க முடியும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !