உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குறுகலான சாலையில் வாகனங்கள் செல்வதில் சிரமம்

குறுகலான சாலையில் வாகனங்கள் செல்வதில் சிரமம்

பந்தலுார்: பந்தலுார் பஜார் பகுதியில் உள்ள குறுகலான சாலையில் வாகனங்கள் செல்வதில் நாள்தோறும் சிரமம் ஏற்படுகிறது.பந்தலுார் அருகே உப்பட்டி பஜார் பகுதி, தமிழக--கேரள இணைப்பு சாலையில் அமைந்துள்ளது. மிகவும் குறுகலான பஜார் பகுதியை கொண்ட இப்பகுதியில், கடைகளை ஒட்டி நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், சாலையின் இரண்டு பக்கங்களிலும் ஆட்டோ, உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வைப்பதால், இவ்வழியாக வந்து செல்லும் அரசு பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் அடிக்கடி நெரிசலில் சிக்கி விடுகின்றன. அத்துடன் அவசர நேரங்களில் ஆம்புலன்ஸ் கூட செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, உப்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்களை சமன்படுத்தி அந்த பகுதியில் ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்கள் நிறுத்தி செல்ல இடவசதி ஏற்படுத்தி கொடுத்தால், தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், இது குறித்து அரசு அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாத நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் டிப்பர் லாரிகள், அரசு மற்றும் பள்ளி, கல்லுாரி பஸ்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. அத்துடன் மாலை நேரங்களில் டாஸ்மாக் மதுக்கடை அருகே, சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்வதால், பசுந்தேயிலை ஏற்றிய லாரிகள் மற்றும் பஸ்கள் செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே, உப்பட்டி பகுதியில் தொடரும் போக்குவரத்து சிக்கலை தீர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை