உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கார் மோதி சேதமடைந்த நிழல்குடை சீரமைக்காததால் அதிருப்தி

கார் மோதி சேதமடைந்த நிழல்குடை சீரமைக்காததால் அதிருப்தி

கூடலுார்;கூடலுார் மாக்கமூலா பகுதியில், மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரம், நகராட்சி சார்பில் நிழல் குடை அமைத்துள்ளனர். மாக்கமூலா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் இந்த நிழல் குடையை பயன்படுத்தி வந்தனர்.இரண்டு ஆண்டுகளுக்கு முன், கார் மோதி, நிழல் குடையின் ஒரு பகுதி சுவர் சேதமடைந்தது. அதனை, ஆய்வு செய்த நகராட்சி அதிகாரிகள் சீரமைத்து தருவதாக தெரிவித்தனர். இரண்டு ஆண்டுகளாகியும், சேதமடைந்த நிழல்குடை சீரமைக்கப்படவில்லை. இதனால், பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பயணிகள் கூறுகையில், 'இப்பகுதியில் நிழல்குடை சேதமடைந்துள்ளதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பருவமழையின் போது, திறந்தவெளியில் நிற்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, சேதமடைந்த நிழல் குடையை சீரமைத்து தர வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ