| ADDED : மார் 28, 2024 11:24 PM
குன்னுார்;அரவங்காட்டில், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான பயிற்சியில்,2ம் கட்ட மாதிரி தேர்வு நடந்தது.அருவங்காடு கிளை நுாலகம், செந்தமிழ் சங்கம் சார்பில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, வெடிமருந்து தொழிற்சாலை பள்ளியில் நடந்து வருகிறது.அதில் வாரம் தோறும் மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது.நேற்று நடந்த, 2வது கட்ட மாதிரி தேர்வை, இல்லம் தேடி கல்வி பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் காயத்ரி நடத்தினார்.அருவங்காடு கிளை நுாலகர் ஜெயஸ்ரீ கூறுகை யில், ''இது போன்ற மாதிரி தேர்வில் பங்கேற்கும் அனைவரும் குரூப்- 4 மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஓ.எம்.ஆர் தேர்வு எழுதவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ''முதல் முறை தேர்வு எழுதுபவர்களுக்கு தேர்வுக்கான முழு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் தேர்வு நேரத்தில், பயம், மனஅழுத்தம் குறைய வாய்ப்பு உள்ளது,'' என்றார்.