கூடலுார்;கூடலுார் அருகே, லாரி -ஆட்டோ மோதிய விபத்தில், ஆட்டோ டிரைவர் படுகாயம் அடைந்தார்.மேல் கூடலுாரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபு,35. இவர் நேற்று முன்தினம், இரவு, 8:30 மணிக்கு சவாரி முடித்துவிட்டு, கூடலுாரில் இருந்து ஆட்டோவில், ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றார். அப்போது, ஹெல்த்கேம்ப் அருகே, ஊட்டியில் இருந்து வேகமாக வந்த, ஈச்சர் லாரி ஆட்டோவில் மோதி விபத்துக்குள்ளானது. ஆட்டோ சேதமடைந்தது. படுகாயம் அடைந்த பிரபு, சிகிச்சைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்விபத்து ஏற்படுத்தி, நிற்காமல் சென்ற லாரியை, ரோந்து பணி எஸ்.எஸ்.ஐ., லட்சுமணன், காவலர் கருணாகரன் போலீஸ் ஜீப்பில் விரட்டி சென்று தொரப்பள்ளி அருகே நிறுத்தினர். ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டதில், 'அவர், மேற்கு வங்காளத்தை சேர்ந்த, முஜிப்பூர். இவர், முதுமலை சாலை மூடப்படும் என்பதால் லாரியை வேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தி, நிறுக்காமல் சென்றார்,' என்பது தெரிய வந்தது. மேல் விசாரணைக்காக லாரி மற்றும் டிரைவரை கூடலுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.