ஊட்டி, : 'தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டு சாவடிக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எடுத்து செல்ல இன்று காலை, 9:30 மணிக்கு ஆஜராக வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி லோக்சபா தொகுதி, ஊட்டி, குன்னுார், கூடலுார், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் ஆகிய ஆறு தொகுதிகளை உள்ளடக்கியது. இங்கு, '6 லட்சத்து 83 ஆயிரத்து 21 ஆண் வாக்காளர்கள்; 7 லட்சத்து 35 ஆயிரத்து 797 பெண் வாக்காளர்கள், 97 மூன்றாம் பாலினத்தவர்,' என, மொத்தம், 14 லட்சத்து 18 ஆயிரத்து 914 வாக்காளர்கள் உள்ளனர். ஆறு தொகுதிகளில், 1,619 ஓட்டு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 'ஆறு தொகுதிகளுக்கு எடுத்து செல்லும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், 65 வகையான பொருட்கள் மற்றும் அந்தந்த ஓட்டு சாவடிகளுக்கு செல்லும் வாகனங்கள்,' என, அனைத்து பணிகளை அந்தந்த தொகுதியின் ஆர்.டி.ஓ., க்கள் தலைமையில் தயார் நிலையில் வைத்துள்ளனர். காலை 9:30 மணிக்கு ஆஜராக வேண்டும்
'தொகுதிக்கு உட்பட்ட பள்ளி, கல்லுாரியில் அமைக்கப்பட்ட ' ஸ்டாரங்' ரூமிற்கு தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் இன்று காலை, 9:30 மணிக்கு ஆஜராக வேண்டும். முதலில் தொலை துார இடங்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்ல வேண்டும்.தொடர்ந்து, 19 ம் தேதி ஓட்டுப்பதிவு முடிந்தவுடன், மொத்த முள்ள, 1,619 ஓட்டுசாவடிகளின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஊட்டி பிங்கர்போஸ்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் மையத்தில் அமைக்கப்பட்ட ஸ்டராங் ரூமிற்கு கொண்டு வரப்படுகிறது. அந்த மையத்தை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.இப்பகுதியில், நான்கு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 'ஓட்டுப்பதிவு நாளில் மின்னணு ஓட்டுப்பதிவு பயன்பாடு குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டுசாவடியில் எவ்வித விதி மீறல்களிலும் ஈடுபட கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ட்ராங் ரூமில் ஆய்வு
ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் மையத்தில் உள்ள ஸ்டராங் ரூமில் வைக்கப்படுகிறது. அங்கு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளின் ஜன்னல்கள் அனைத்தும் பிரேவுட் தகரம் போன்றவைகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. இரும்பு வலை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேஜை, முகவர்கள் வந்து செல்லும் வழி, குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்தை தேர்தல் நடத்தும் அலுவலர், அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.