உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ரூ.34 லட்சத்தில் உலர் களத்துடன் தரம் பிரிக்கும் கூடம் இத்தலார் விவசாயிகள் பயன்பெற அழைப்பு

ரூ.34 லட்சத்தில் உலர் களத்துடன் தரம் பிரிக்கும் கூடம் இத்தலார் விவசாயிகள் பயன்பெற அழைப்பு

ஊட்டி: இத்தலார் ஊராட்சியில், 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உலர் களத்துடன் கூடிய தரம் பிரிக்கும் கூடம் அமைக்கப்பட்டது. ஊட்டி ஊராட்சி ஒன்றியம் இத்தலார் ஊராட்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உலர் களத்துடன் கூடிய தரம் பிரிக்கும் கூடம் கட்டப்பட்டுள்ளது.அதனை கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்து பேசியதாவது: நீலகிரியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலமாக, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 2021-- 2022ம் நிதியாண்டில், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோத்தகிரி வட்டாரத்தில் நெடுகுளா ஊராட்சியில் உலர் களம் அமைக்கப்பட்டுள்ளது. 2022--23ம் நிதியாண்டில், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊட்டி வட்டாரத்தில் தொட்டபெட்டா ஊராட்சியில் உள்ள கீழ் கவ்வட்டி கிராமம், உல்லத்தில் ஊராட்சி ஏக்குணி கிராமம், கூடலுார் வட்டத்தில் நிலக்கோட்டை ஊராட்சி அட்டக்கடவு கிராமத்திலும் உலர் களங்கள் அமைக்கப்பட்டுள்ளது.2023--2024 ம் நிதியாண்டில் இத்தலார் ஊராட்சியில், 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உலர் களத்துடன் கூடிய தரம் பிரிக்கும் கூடம் பணி முடிந்ததை அடுத்து திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களின் விலை பொருட்களை உலர வைத்து தரம் பிரிக்கவும், சேமித்து வைக்கவும் நல்ல முறையில் பயன்படுத்தி உரிய சந்தை விலை பெற்று பயனடையலாம்.இவ்வாறு, அவர் பேசினார். கூடுதல் கலெக்டர் கவுசிக், வேளாண்மை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ