மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
பந்தலுார்:பந்தலுார் அருகே உள்ள டான்டீ தேயிலை தோட்டத்தில் உரமிடும் பணி துவக்கப்பட்டுள்ளது.நீலகிரியில் கடந்த, ஏப்., மாதம் வரை நிலவிய கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, தேயிலை தோட்டங்கள் கருகி பசுமையான தேயிலை செடிகள் காய்ந்து மகசூல் இல்லாமல் இருந்தது. தற்போது, கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில், கருகிய தேயிலை செடிகள் பசுமைக்கு மாறியது. அதில், பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள, தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகமான, 'டான்டீ' தோட்டத்தில் தேயிலை மகசூலை அதிகரிக்கும் வகையில், உரமிடும் பணி துவங்கப்பட்டு உள்ளது.'தோட்ட நிர்வாகம் நஷ்டத்தில் இயங்குகிறது,' எனக்கூறி, கடந்த பல ஆண்டுகளாக, உரம் இடுதல் மற்றும் மருந்து தெளித்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது உரமிடும் பணி துவங்கப்பட்டதால், தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தொழிலாளர்கள் கூறுகையில், 'தோட்ட தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், தோட்டங்களை முறையாக பராமரித்து தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்,' என்றனர்.
03-Oct-2025