மேலும் செய்திகள்
மசினகுடி வனத்துறை அலுவலகம் முற்றுகை
05-Feb-2025
தெப்பக்காடு - மசினகுடி சாலையில் மறியல்
30-Jan-2025
கூடலுார்; முதுமலை, மசினகுடி -தெப்பக்காடு சாலையோர வனத்தில் உள்ள, தண்டு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியை வனத்துறையினர் துவங்கினர்.முதுமலை புலிகள் காப்பகம் பகுதிகளில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. வறட்சியில், வனத்தீ ஏற்படுவதை தடுக்க, வனத்துறையினர் தீ தடுப்பு கோடு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, மசினகுடி கோட்டம், மசினகுடி வனச்சரகத்திற்கு உட்பட்ட மசினகுடி- தெப்பக்காடு சாலை ஓரத்தில் செயற்கை தீ மூலம் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி துவங்கினர்.பணிகளை துவங்கும் முன், சாலையோரம் உள்ள தண்டு மாரியம்மன் கோவிலில் பழங்குடியினர் பாரம்பரிய முறைப்படி, பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். மசினகுடி வனச்சரகர் பாலாஜி, மாணவர்கள் சந்தன்ராஜ், ரகுபதி, காப்பாளர்கள் அந்தோணி எபினேசர், கேத்தன், மோகன் மற்றும் வன காவலர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, சாலையோரம் தீ தடுப்பு கோடு அமைக்கும் பணிகளை துவங்கினர்.வனத்துறையினர் கூறுகையில், 'ஆண்டுதோறும், சாலையோரம் உள்ள தண்டு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, தீ தடுப்பு கோடு அமைக்கும் அணி துவங்கப்படும். அதன்படி நடப்பு ஆண்டும் பூஜை செய்து பணியை துவங்கி உள்ளோம்,' என்றனர்.
05-Feb-2025
30-Jan-2025