உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இனபெருக்க காலத்தால் மீன் விலை திடீர் உயர்வு

இனபெருக்க காலத்தால் மீன் விலை திடீர் உயர்வு

ஊட்டி;இனபெருக்க காலத்தால், ஊட்டியில் மீன் விலை திடீரென உயர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டம், ஊட்டி மார்க்கெட், குன்னுார், கூடலுார் ஆகிய பகுதிகளில் மீன் மார்க்கெட் செயல்படுகிறது. மேலும், மாவட்ட முழுவதும் ஏராளமான மீன் கடைகள் உள்ளன. இவற்றுக்கு, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளாவில் கோழிக்கோடு, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும், 25 டன் மீன் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.தற்போது, பல மாநிலங்களில் மீன் இனபெருக்க காலம் என்பதால், மீன் மார்க்கெட்டுகளுக்கு குறைவாக மீன்கள் கொண்டு வரப்படுகிறது. வரத்து குறைந்ததால், ஒரு கிலோ, 140 ரூபாய்க்கு விற்கப்பட்ட மத்தி மீன், 360 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. சங்கரா மீன், 200 ரூபாயிலிருந்து, 320 ரூபாய்; விளா மீன், 350 ரூபாயில் இருந்து, 450 ரூபாயாக உயர்ந்தது. இரால் மீன் விலை, 470 முதல் - 530 ரூபாய் வரை விற்கப்பட்டது. கடல் நண்டுகளுக்கும் கிராக்கி அதிகமாக இருந்தது. மீன் விலை, திடீரென உயர்ந்ததால், அசைவ பிரியர்கள் கவலைஅடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ