மேலும் செய்திகள்
தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை எதிர்த்து மறியல் போராட்டம்
46 minutes ago
பழங்குடியினர் கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு
47 minutes ago
கூடலுார்:கூடலுார் பாடத்துறை பகுதியில், உண்ணி செடிகள் அகற்றப்பட்ட வனப்பகுதியில், நடவு செய்வதற்காக, சீமை புற்களை சேகரிக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.கூடலுார் வன கோட்டம், யானை, காட்டெருமை, மான்கள் உள்ளிட்ட தாவர உண்ணிகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. கோடை காலத்தில், இதனை ஒட்டி முதுமலை வனப்பகுதியில் இருந்து யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இப்பகுதிக்கு உணவு, குடிநீர் தேடி வந்து செல்வது வழக்கமாக உள்ளது.ஆனால், பெரும்பாலான வனங்களில் எந்த பயனும் இல்லாத உண்ணி செடிகள், வளர்ந்து காணப்படுகிறது. இதன், வளர்ச்சி காரணமாக, அப்பகுதிகளில், வனவிலங்குகள் விரும்பி உண்ணக்கூடிய தாவரங்கள் வளர முடியாத நிலை உள்ளது.இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கூடலூர் வனச்சரகத்தில் முதல் கட்டமாக, பாடந்துறை வாசக்கொல்லி ஒட்டிய, வனப்பகுதியில், 125 ஏக்கர் பரப்பளவில் வளர்ந்துள்ள உண்ணி செடிகளை, வேரோடு அகற்றும் பணியை வனத்துறையினர் நிறைவு செய்துள்ளனர். தொடர்ந்து, அப்பகுதியில், வன விலங்குகள் விரும்பி உண்ண கூடிய தாவரங்கள் வளரும் சூழல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், இரண்டு வாரங்களில் பருவ மழை துவங்க உள்ளது. இதனை கருத்தில் கொண்டு யானை உள்ளிட்ட தாவர உண்ணிகள் விரும்பி உண்ணக்கூடிய சீமை புற்களை, கூடலுார் வனப்பகுதியிலிருந்து சேகரித்து, பிற பகுதியில் நடவு செய்யும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வனத்துறையினர் கூறுகையில்,'வனப்பகுதியில் உண்ணி செடிகள் வளர்வதன் மூலம், அப்பகுதியில் தாவர உண்ணிகள் விரும்பி உண்ணக் கூடிய தாவரங்கள் வளர முடியாது நிலை ஏற்பட்டது. தற்போது, அப்பகுதியில் இருந்த உண்ணி செடிகள் அகற்றப்பட்டது. தற்போது, அப்பகுதியில் வனவிலங்குகள் விரும்பி உண்ண கூடிய புற்கள் வளர்க்கும் பணியை மேற்கொண்டுள்ளோம். அப்பகுதியில் நடவு செய்வதற்காக, யானைகள் விரும்பி உண்ணக்கூடிய சீமை புற்களை சேகரித்து வருகிறோம்,' என்றனர்.
46 minutes ago
47 minutes ago