மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
02-Oct-2025
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
02-Oct-2025
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
02-Oct-2025
கூடலுார்;கூடலுார் நகரில் திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பைகள், குறித்த நேரத்தில் அகற்றப்படாததால் சுகாதார பாதிப்பு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.கூடலுார் நகரில் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டுவதற்கு நகராட்சி தடை விதித்துள்ளது. கடைகளில் மட்கும் குப்பை, மட்காத குப்பை பிரித்து வைத்து, நகராட்சி வாகனங்களில் வரும் ஊழியர்களிடம் வழங்க அறிவுறுத்தி உள்ளனர். பல கடைக்காரர்கள் இதனை பின்பற்றி வருகின்றனர்.சிலர் குப்பைகளை திறந்த வெளியில் கொட்டி செல்கின்றனர். இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளை குறித்த நேரத்தில் அகற்றவும் நகராட்சி நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால், சுகாதார பாதிப்பு ஏற்படுவதால் மக்கள் அதிருப்தி அடைத்துள்ளனர்.மக்கள் கூறுகையில், 'நகரில் திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பைகள், நீண்ட நேரம் அகற்றப்படாமல் உள்ளதால், சுகாதார பாதிப்பு ஏற்படுவதுடன், தொற்று நோய்கள் பரவும் ஆபத்து உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம், நகரில் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும்,' என்றனர்.
02-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025